பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 9 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (25 – 31 அக்டோபர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (25 – 31 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். #sbsaudiopodcast Top news from Australia this week (25 – 31 October 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b1b280e379b4cd8fe33576998da1eb588a53adf70d59e1fd9b0f1bb0b54337d6
2026-10-31 00:06:07 கேள்
திறந்தது Western Sydney Airport! பயணிக்க விரும்புவோர் அறிய வேண்டியது என்ன?

சிட்னியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான Western Sydney International Airport கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பயணிகள் சேவையைத் தொடங்கியது. பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புதிய விமான நிலையத்தால் விமானக் கட்டணங்கள் குறையுமா? மேற்கு சிட்னி மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? உள்ளிட்ட பல தகவல்களை SBS Newsஇன் Caroline Riches தயாரித்த விவரணத்தின் உதவியுடன் தொகுத்து வழங்குகிறார், பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இரா. சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல். #sbsaudiopodcast Western Sydney Airport opens: What does it mean for travellers?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
fe12543e6fd6c91a4fd1fdcb0243f17c28eed97f01286de89ec462af0c641966
2026-10-31 00:11:50 கேள்
இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (30 October 2026 - Friday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1ac625370271d256c0477dda5291856e1e63969b68ec673f5bea42413709c237
2026-10-30 00:04:17 கேள்
Advance Care Planning, Residential Aged Care/ Home Care – முதியோருக்கான முன்திட்டமிடல்

வயது முதிர்வும் நோயும் எப்போது வரும் என்பதை எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பராமரிப்பை இன்றே திட்டமிடுவதன் மூலம், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பல சிரமங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த முக்கியமான விழிப்புணர்வுத் தலைப்பில், Blacktown மற்றும் Mount Druitt மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் துணை இயக்குநரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளருமான டாக்டர் பி. ஜெயரூபன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Don’t Wait for a Crisis: Planning Ahead for Our Elders

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
4a158e20168d9f32cf18d5d16844c89f6b7d6115d9d53c3bc78ff83e73be3b36
2026-10-30 00:15:11 கேள்
சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!

Bankstown முதல் Sydenham வரையிலான புதிய தென்மேற்கு மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New Metro Train Service opens to the public in NSW!

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
3d150889179bf105378c40c5a7eefd7e1ea9db271ee4a01500f3e5610f0fb9ba
2026-10-30 00:03:18 கேள்
Bondi தாக்குதல்: இந்திய பின்னணி கொண்ட ஒருவர் போலி இழப்பீடு கோரியதாக குற்றச்சாட்டு

Bondi பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்ததாகப் பொய்யான இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைத்து இழப்பீடு பெற முயன்றதாகக் இந்திய பின்னணி கொண்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Bondi attack: Indian-Australian accused of making a false compensation claim

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e30492c9ee715ab11ea6940574ca271b08295822b007ef5328fcbadded127b25
2026-10-30 00:03:09 கேள்
Does rising racism towards Indian Australians point to deeper issues? - ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி - பின்னணி என்ன?

Many Australians of Indian origin say they’re being singled out and blamed for concerns around housing, jobs and immigration — from online comments telling them to “go back” to reports of physical abuse. - ஆஸ்திரேலியாவின் குடிவரவு விவாதங்களில் இந்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து SBS Examines- இற்காக SBS Punjabi ஒலிபரப்பின் Shyna Kalr ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Does rising racism towards Indian Australians point to deeper issues?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
0feb7d6c39aab77f196c92c8f778ab5828688cda91e724b0692b589d628ee4e6
2026-10-30 00:09:56 கேள்
Centrelink: மீண்டும் தொடங்கப்பட்ட அபராதங்கள் உங்களை எப்படிப் பாதிக்கும்?

கிட்டத்தட்ட ஆயிரம் வேலைதேடுவோருக்கு நடந்தது சட்டத்துக்கு முரணானது என்கிறார், அரசுத் துறைகளைக் கண்காணிக்கும் Commonwealth Ombudsman. இப்போது, ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோரை இழப்பீடு கோர விண்ணப்பிக்குமாறு ஃபெடரல் அரசு அழைத்திருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Centrelink: Mutual obligation requirements and compliance penalties restarted

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
66725a2f245e7d7d3b3ff46ac2fa631c4cf51d4523cc7f465fcd662b36b719f7
2026-10-29 00:08:10 கேள்
நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா?

நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாம் என்று எண்ணியது உண்டா? என்று சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் வழங்கிய பதில்களை தொகுத்து தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு. #sbsaudiopodcast Have you ever wished you were born a man?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e464d961924e6d05ceb06b023b594e12a3e07ff3d8d9db5e422ce256b3744ec0
2026-10-29 00:12:36 கேள்
Blue Mountains: ஆஸ்திரேலியாவில் இயற்கை வடித்த உலகப் பாரம்பரிய அதிசயம்

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த இயற்கை அதிசயங்களில் ஒன்றான ப்ளூ மவுன்டன்ஸ், கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானது. நீல நிறமாகத் தோன்றும் மலைத்தொடர்கள் உள்ளிட்ட தனித்துவமான இயற்கை அழகுடன் மிளிரும் இந்தப் பகுதி, UNESCO உலகப் பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ப்ளூ மவுன்டன்ஸ் குறித்த சிறப்புத் தகவல்களைத் தொகுத்து, “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் கீதா மதிவாணன். தயாரிப்பு: றைசெல். #sbsaudiopodcast Blue Mountains: A world heritage treasure in the heart of Australia

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
08c3dc02c68dbc2976f99bfc6494e48e16ec8f6a842adcb0c982f850d6e1a304
2026-10-29 00:07:48 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.