பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 6 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

தமிழகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டங்கள்; தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரம்; மணல் குவாரி முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு விரைவில் சம்மன்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
921374cde18f3c7f310156f85a9611bd8bd927548f783fafe438e30e608fbb6e
2026-11-08 00:08:46 கேள்
16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சவால்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் ஊடகத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Australia’s social media ban faces high court challenge

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
24526ea4483681a6b11f34666e28a72e7f47f06ca20dd71c46838ffdd5adffd0
2026-11-08 00:08:43 கேள்
இன்றைய செய்திகள்: 09 நவம்பர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (09 November 2026 - Monday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
c901ef3f9f980e3296367198390453816af9398714c14e98b2b197eb612f7e10
2026-11-08 00:04:35 கேள்
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (01 நவம்பர் – 07 நவம்பர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (01 நவம்பர் – 07 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (01 November – 07 November 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
96a1f67e5c595c35155e6449385cfa923d40094a087ed16718e36832804534fa
2026-11-07 00:05:26 கேள்
"பெயர் உங்களதாக இருக்கலாம், ஆனா நிலம் எப்போதும் எங்களது தான்!"

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாகத் திரையிடப்படும் ‘போராட்டம்' என்ற இலங்கைத் தமிழ் திரைப்படத்தை எழுதி, இயக்கிய ராஜ் சிவராஜ் அவர்களுடன், அந்தத் திரைப்படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interview with Raj Sivaraj, Director of Poraattam

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
7341b16c89dc00ab68a1f9c93db379b82f619583b1576b76c43e90636ce82a67
2026-11-07 00:14:10 கேள்
யாருடைய அறியாமை? சொல்லப்படாத தீபாவளியின் கதை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீபாவளித் திருவிழாக்கள் சிலவற்றில், இராவணனின் பிரம்மாண்டமான உருவ பொம்மை எரிக்கப்படுவதோடு அந்த இரவு நிறைவடைகிறது. பலருக்கு இது தீயவற்றின் மீது நன்மைகள் பெற்ற வெற்றியைக் குறிக்கும் மகிழ்ச்சியான அடையாளமாகும். ஆனால், பல தமிழ் மற்றும் இலங்கை வம்சாவளி ஆஸ்திரேலியர்களைப் பொறுத்தவரை, இது போற்றத்தக்க ஒரு மன்னன் எரிக்கப்படுவதாகவே அமைகிறது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Whose ignorance? The untold story of Deepavali

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
d6f45897725ef2a6f5e3cfe1e9d3ba9b7b309576c0261f86d0b33a4849eba0d1
2026-11-06 00:16:31 கேள்
இஞ்சியின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சியே இந்த நிகழ்ச்சி. அந்த வகையில் இன்று 'இஞ்சி' பற்றி அறிந்துக்கொள்வோம். இஞ்சியின் மருத்துவ குணங்கள், அன்றாடம் நாம் எப்படி இலகுவாக இஞ்சியை உட்கொள்ளலாம் என்பதை சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்களிடமிருந்து அறிந்துக்கொள்வோம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Medical benefits of ginger

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
2c8e4c3b7d56524b4917e525f16d31b2c30fc7b170cd1fb70ddaf3404df7f134
2026-11-05 00:08:54 கேள்
235 மில்லியன் டொலர் மோசடி செய்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு !

மாற்றுத்திறனாளிகளுக்கான NDIS நிதி, Centrelink கொடுப்பனவுகள், மூத்த படைவீரர் உதவி, குழந்தைப் பராமரிப்பு மானியம் - இவை அனைத்தும் வரி செலுத்தும் மக்களின் பணம். அந்தப் பணத்தில் சுமார் 235 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டதாக, அல்லது மோசடி அபாயத்தில் இருந்ததாக, ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை (AFP) நேற்று அறிவித்துள்ளது. அத்துடன், நாடு தழுவிய சோதனைகளைத் தொடர்ந்து ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Police arrest five over $235m fraud

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
1651c576b6f445fc9ac8145bb7ed8a29ec1130b52d75f90ed07808b17134d1f6
2026-11-05 00:09:06 கேள்
உறவுகளின் நினைவுகளோடு… புதிய உறவுகளுடன் ஆஸ்திரேலியாவில் தீபாவளி

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் உறவினர்களைப் பிரிந்து, ஆஸ்திரேலியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்கள் எப்படிப்பட்டவை? சிட்னியில் North Kellyville-இல் வசிக்கும் தம்பதியனர் ஹரிஹரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜனனி ஹரிஹரன் இருவரும் தங்கள் உறவுகள் தொலைவில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாடும் விதம், புதிய குடும்பப் பாரம்பரியங்களை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து செல்வி இன்பசேகரனுடன் கலந்துரையாடுகிறார்கள். #sbsaudiopodcast Missing loved ones, embracing new bonds – Deepavali in Australia

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
e673dd456063c15f2d49f55385e51ee661dc1f7491d23c38fa8b7f1388d8f80a
2026-11-05 00:14:28 கேள்
ஆஸ்திரேலியாவுடன் போர் தொடுத்த மிகச்சிறிய நாடு

ஆஸ்திரேலியா ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் வாழ்ந்த நாடுகளைக் கணக்கில் எடுக்காமல், இந்தக் கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்று கேட்டால், "அது தானே நீங்களே சொல்லிவிட்டிர்களே, ஆஸ்திரேலியா தான் இந்தக் கண்டத்திலுள்ள நாடு," என்று கேட்பீர்கள் இல்லையா... . பல, micronation என்று சொல்லப்படும் மிகச்சிறிய நாடுகள் உலகில் இருக்கின்றன. அதில் பாதிக்கு மேல், சுமார் இருபத்தி மூன்று மிகச்சிறிய நாடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ளன. அவற்றில் பழமையான நாடான Principality of Hutt River குறித்த ஒரு கதையை அதன் இளவரசர் Graeme அவர்களின் கருத்துகளுடன் 2015ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு. #sbsaudiopodcast Micro nation that waged war on Australia

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
77be291cfeeeb85fbc170b877ae841c2402b0349b99262df9b38cf5233ab871d
2026-11-05 00:12:36 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.