பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 1 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
குடியேற்ற நாடாக அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு குறைகிறதா?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பான OECD வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் குடியேற்ற நிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Is Australia losing its appeal as a Migration destination? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-23 | 00:08:54 | கேள் |
|
கிரிப்டோ உலகை உலுக்கிய திருட்டு: பின்னணியில் இருப்பவர்கள் யார்?
உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமான Binance மீது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய இணையத்திருட்டுச் சம்பவம், டிஜிட்டல் நாணயங்களின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? மற்றும் சாதாரண முதலீட்டாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பாடங்கள் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast The crypto heist that shook the world: Who is behind it? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-23 | 00:09:54 | கேள் |
|
What does Kumanjayi mean? Understanding Sorry Business - ‘குமன்ஜெய்’ - பூர்வீகக் குடிமக்களின் துயர் பகிரும் முறை
When someone dies, families and communities may have cultural practices and responsibilities around mourning. For many Aboriginal and Torres Strait Islander people, this is known as Sorry Business. There is no single way to observe Sorry Business. Practices differ between communities, families and language groups. Learn about what Sorry Business can involve, what the term “Kumanjayi” means in some Central Australian communities, and how you can show care when someone is grieving. - ஓர் உயிர் இந்த மண்ணிலிருந்து விடைபெறும்போது, அது விட்டுச்செல்வது வெறுமையை மட்டுமல்ல. அந்தத் துயரைச் சுமந்து கடக்க, குடும்பங்களும் சமூகங்களும் தமக்கென்று சில பண்பாட்டு மரபுகளையும் கடமைகளையும் கைக்கொள்ளக்கூடும். பூர்வீகக்குடி மற்றும் Torres நீரிணைத் தீவுவாழ் மக்கள் பலர், துக்கம் காக்கும் இந்த மரபுகளை Sorry Busines தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-22 | 00:12:20 | கேள் |
|
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
திருப்பரங்குன்றம் தூணில் நவ.24 ஆம் தேதி காா்த்திகை தீபம் ஏற்றலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு; திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியா?; தமிழக முதலமைச்சர் விஜய் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-22 | 00:08:15 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 23 நவம்பர் 2026 - திங்கட்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (23 November 2026 - Monday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-22 | 00:04:06 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/11/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (20 November 2026 - Friday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-20 | 00:04:17 | கேள் |
|
ஞானாவின் இசை ஞானம்: எது தமிழர் இசை?
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville எனும் இடத்தில் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. தமிழ் அறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்று தற்போது சிட்னியில் வாழும் முனைவர் ஞானா குலேந்திரன் அவர்களும் இந்த நிகழ்வில் ‘எது தமிழர் இசை’ என்ற தலைப்பில் பேசவுள்ளார். முனைவர் ஞானா குலேந்திரன் அவர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்தும், இந்நிகழ்வு குறித்தும் அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Sydney Tamil Literary Meet Asks: What is Tamils’ Music? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-20 | 00:10:55 | கேள் |
|
'Something we build together': How young people are shaping the future of this regional city - இளைஞர்கள் எத்தகைய சமூகத்தை உருவாக்க விரும்புகிறார்கள்?
Australians are more pessimistic and more divided, according to the latest social cohesion report by the Scanlon Foundation. But these teenagers are showing how strong local connections help maintain social cohesion in their communities. - ஆஸ்திரேலியர்கள் மத்தியில் பிளவுகளும் எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் அதிகரித்துள்ளன என ஸ்கான்லன் அறக்கட்டளையின் சமீபத்திய சமூக ஒற்றுமை அறிக்கை தெரிவிக்கிறது. #sbsaudiopodcast #sbsexamines - #sbsaudiopodcast #sbsexamines 'Something we build together': How young people are shaping the future of this regional city தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-20 | 00:11:08 | கேள் |
|
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 நவம்பர் – 21 நவம்பர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (15 நவம்பர் – 21 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (15 November – 21 November 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-20 | 00:06:43 | கேள் |
|
ஆட்குறைப்பு அலை: வேலை தேடுவது ஏன் இவ்வளவு கடினம்?
வேலையில்லாதோர் எண்ணிக்கை குறித்த (ABS) ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து முந்நூறு பேர் வேலையை இழந்துள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast The redundancy wave: why job-hunting got so hard தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-19 | 00:08:51 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.