பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 15 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருது வாங்கிய திரைப்படம்
திரைக்கு வருவதற்கு முன்பே 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்ற திரைப்படமான “To Let" திரைப்படத்தின் இயக்குனர் செழியன் அவர்களுடன் ஒரு நேர்காணல். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Interview with Chezhiyan, the director of "To Let" movie தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-15 | 00:14:48 | கேள் |
|
Stroke-பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது?
Stroke/பக்கவாதம் என்பது ஒருவரின் வாழ்க்கையைத் திடீரெனப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மருத்துவ அவசரநிலை. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கிறார் மருத்துவர் சுமிதா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-15 | 00:12:27 | கேள் |
|
யானைச் சாணத்தால் செய்யப்பட்ட பொருளுடன் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா வந்த பயணி
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு யானைச் சாணத்தால் செய்யப்பட்ட Fridge Magnets-ஐ பயணி ஒருவர் கொண்டுவந்தமை குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-15 | 00:02:20 | கேள் |
|
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026)
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-15 | 00:08:33 | கேள் |
|
2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்?
நோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நோபல் பரிசுகளைப் பெறுபவர்கள் யார்? எந்தச் சாதனைகளுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து விளக்கமாகத் தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். 2026 Nobel Prizes: Who are the people changing the world? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-15 | 00:15:01 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 14 ஒக்டோபர் 2026, புதன்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/10/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-14 | 00:04:00 | கேள் |
|
வீட்டுக்கான காப்புறுதி (Insurance) கட்டணம் உயர்கிறது! ஏன்?
சூழல் வெப்பமடைந்து வருவதாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாலும், காட்டுத்தீ அச்சுறுத்தல்களின் அடிப்படையில் இந்தக் கோடைக்காலம் எப்படி இருக்குமோ என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஏற்படக்கூடிய அபாயத்திற்காகத் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் மக்கள் தயார்படுத்தி வருகின்றனர். சிலர் காட்டுத்தீயைத் தடுக்கும் பொருட்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான டொலர்களைச் செலவிடுகின்றனர். சில சமயங்களில், நில உரிமையாளர்கள் தங்கள் சமூகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். மேலும், தாங்கள் செய்துள்ள பணிகள் காப்பீட்டு பிரீமியங்களில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். Kerrin Thomas மற்றும் Charis Chang எழுதிய சிறப்பு விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-14 | 00:12:55 | கேள் |
|
ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் தொடரும் சவால்கள் என்ன?
ஆஸ்திரேலியாவில் குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில் பிரிஸ்பேனில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் சுகன்யா, நதியா சந்திரசேகரன், சங்கர் ஜெயபாண்டியன் ஆகியோர் இத்தகைய சவால்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலி ஒலிப்பதிவு கூடத்தில்வைத்து SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். Living in Australia for years: What challenges remain? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-14 | 00:18:41 | கேள் |
|
குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடுவோருக்கு என்னென்ன தெரிவுகள் உள்ளன?
இளம் வயதிலேயே கருமுட்டைகளை அல்லது விந்தணுக்களை உறைநிலையில் சேமித்து வைப்பது எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குமா, யாரெல்லாம் இதனைப் பரிசீலிக்கலாம், இதன் நன்மைகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மருத்துவ வாய்ப்புகள் குறித்து பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-14 | 00:15:32 | கேள் |
|
தற்காப்புக்காக pepper spray பயன்படுத்த நிரந்தர அனுமதி வழங்கும் ஆஸ்திரேலியப் பிராந்தியம்!
Northern Territoryஇல் தற்காப்புக்காக Pepper Spray பயன்படுத்துவதற்கான அனுமதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-14 | 00:02:33 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.