பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 7 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
வீழ்ச்சியில் David Jones - நடந்தது என்ன? ஊழியர்கள், Gift Cards வைத்திருப்போரின் நிலை?
188 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரபல David Jones நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுமார் 6,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast David Jones in Crisis: Customers rush to spend gift cards as David Jones goes into administration தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-05 | 00:11:01 | கேள் |
|
உடல் எடை குறைக்க இனி ஊசி தேவையில்லை? Wegovy மாத்திரைக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி!
ஆஸ்திரேலியாவில் உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெகோவி (Wegovy) மருந்து மாத்திரை வடிவில் கிடைப்பதற்கு Therapeutic Goods Administration (TGA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new era in weight loss – Wegovy in a new form தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-05 | 00:03:16 | கேள் |
|
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 31– நவம்பர் 06, 2026)
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 31 – நவம்பர் 06 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (October 31 – November 06, 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-05 | 00:08:16 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 06 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 06/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (06 November 2026 - Friday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-05 | 00:04:48 | கேள் |
|
இன்றைய செய்திகள்: 04 நவம்பர் 2026, புதன்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (04 November 2026 - Wednesday) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:03:22 | கேள் |
|
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் சவால்கள் என்ன? எப்படிச் சமாளிப்பது?
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளன. குழந்தைகள் எதிர்கொள்ளும் மனரீதியான சவால்களைப் பெற்றோர் எவ்வாறு அடையாளம் காணலாம் என்று குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்குகிறார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையவழி ஆலோசனை சேவைகளை வழங்கி வருகின்ற Mind Matterz Counselling mind-matterz-counselling.netlify.app நிறுவனர் இளவரசி ராஜா அவர்கள். Australian Counselling Association-இன் பதிவு பெற்ற ஆலோசகரான இளவரசியுடன் பிரிஸ்பேனில் உள்ள 4EB தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் SBS தமிழ் ஒலிபரப்புக்காக உரையாடியவர் றைசெல். #sbsaudio podcast What challenges do parents face in raising children, and how can they overcome them? தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:13:09 | கேள் |
|
வீடு வாங்க வசதி இல்லையா? ஒருவேளை அது உங்களுக்குச் சாதகமான ஒன்றாக இருக்கலாம்
நீங்கள் விரும்பும் இடத்தில் வீடு வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததால், வாடகை வீட்டில் வசிக்கும் இலட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம். இத்தகைய சூழலில், வேகமெடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பந்தயத்தில் நீங்கள் பின்தங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால், முற்றிலும் மாறியுள்ள தற்போதைய பொருளாதாரச் சூழலில், நம் வாழ்வின் சில கட்டங்களில், வீடு வாங்குவதை விட வாடகை வீட்டில் வசிப்பதே நிதிப் பாதுகாப்பிற்கான சிறந்த வழியாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். Camille Bianchi மற்றும் Kerrin Thomas ஆகியோர் எழுதிய விவரணத்தின் அடிப்படையில், இது குறித்து குலசேகரம் சஞ்சயன் தமிழில் முன்வைக்கும் செய்தியின் பின்னணி இது. #sbsaudiopodcast Can't afford to buy a home? You might just be better off தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:10:40 | கேள் |
|
Parramatta Powerhouse அருங்காட்சியகம் - மேற்கு சிட்னியின் புதிய கலாச்சார அடையாளம்!
மேற்கு சிட்னியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாரமட்டா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பவர்ஹவுஸ் அருங்காட்சியகம் நவம்பர் 7ஆம் தேதி பொதுமக்களுக்காகத் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast A new cultural landmark for Western Sydney – Powerhouse Parramatta Museum opens தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:03:22 | கேள் |
|
விலைவாசி முதல் வட்டிவீத உயர்வு வரை: என்ன நடக்கிறது ஆஸ்திரேலியாவில்?
ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதுடன், வாழ்க்கைச் செலவுகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வரும் நிலையில் வீட்டுக் கடன் வைத்திருக்கும் குடும்பங்களும் வணிக நிறுவனங்களும் கூடுதல் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கின்றன.இந்தப் பொருளாதாரச் சூழலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன? என்பது உட்பட பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் பெர்த் நகரில் Prime Accounting AU என்ற நிறுவனத்தை நடத்தி வருபவரும் பொருளாதாரம், வருமானவரி, கம்பனி நிர்வாகம், AI தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், ஆஸ்திரேலியாவின் CA CPA, மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக பல பொருளாதார கட்டுரைகளை எழுதியுள்ள கோவிந்தராஜன் அப்பு அவர்கள். அவருட தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:16:28 | கேள் |
|
'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden - பெற்றோரையும் பிள்ளைகளையும் ஒருசேரப் பராமரிக்கும் தலைமுறை
With the rising cost of living, an ageing population, and support services under strain, more Australians are bearing the brunt of caring responsibilities for both their children and parents. - வளர்ந்து வரும் தங்கள் பிள்ளைகளையும், வயதாகிவரும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வயதினர் Sandwich தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது குறித்து SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Mariel Olenski எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines 'The most lonely feeling': Why the 'Sandwich Generation' is shouldering a growing care burden தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-11-04 | 00:11:16 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.