பாட்காஸ்ட் விவரங்கள்

SBS Tamil - SBS தமிழ்

SBS

விளக்கம்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

விவரங்கள்

சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்

200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 2 பக்கம்

அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம்தேதிகால அளவுகேள்
பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார்

காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Tuesday, November 19, 1946. :Australian country music singer Slim Dusty records his first single.

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
364ca595fa2ac14c407fc0b760e9b4fadebaa3be31da4a6c8c9cafaaa9111a18
2026-11-19 00:05:15 கேள்
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??

ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது. #sbsaudiopodcast Do men really want a special day?

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
b70513544904902f3419f727d114b54ebba0cca75f6ca12b7310d1ecf53d7aad
2026-11-19 00:10:40 கேள்
'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத்

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையாடல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast I speak for my Principles, not for Profit – Nanjil Sampath

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
d0948c3500c2d0e466f50f06793fa9c1125b81bcd77b032067077b7363109b0c
2026-11-19 00:20:05 கேள்
மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை!

2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Three Players or the Whole Team? The Sandpapergate Scandal Explodes Again!

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
9b86e096f59202afbb8e905b75aa2dbf70b713eb9730ffa6fbcfe4131b951de2
2026-11-19 00:10:31 கேள்
AI உலகின் முடிசூடா மன்னனைச் சுற்றிய சர்ச்சை: பின்னணி என்ன?

சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Nvidia CEO controversy: What we know so far

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
74c53ccee7776e4d354eca620edc0453aa64478ae21a01010b492982b67f737a
2026-11-19 00:10:50 கேள்
மறைந்தார் கவிஞர் சேரன்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்

ஈழத்தின் மிகச் சிறந்த கவிஞரும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவரும், பத்திரிகையாளரும், கல்வியாளருமான Dr உருத்ரமூர்த்தி சேரன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 18 புதன்கிழமையன்று கனடாவில் காலமானார். அவரது நினைவாக, கடந்த 2008ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தை மறுபதிவு செய்கிறோம். கவிஞர் சேரனோடு உரையாடியவர் றைசல். #sbsaudiopodcast Poet Cheran passes away at 66

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
efaa50bce86d26d26ce42bbe64c5eec959282ef02c8918494b06d9e3aafc702b
2026-11-19 00:19:38 கேள்
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 14 - நவம்பர் 20 , 2026)

இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை ( நவம்பர் 14 - நவம்பர் 20 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 14 – November 20, 2026)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
a9bb20b67aa7aebcb97152e1687a0eb97d4fe948dae718ba02a1167f517c5abf
2026-11-19 00:08:16 கேள்
இன்றைய செய்திகள்: 18 நவம்பர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (18 November 2026 - Wednesday)

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
43b5efd508cd8f8f58a2e38bb3d8278d9de440fb3156b10edbf4ca25654e9120
2026-11-18 00:03:12 கேள்
‘வீசா முறையில் அரசு குத்துக்கரணம்’ எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Backpacker visa என்று பரவலாக அழைக்கப்படும் வேலை-விடுமுறை வீசா திட்டத்தில், ஃபெடரல் அரசு நேற்று பின்வாங்கியிருக்கிறது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு வீசாக்களுக்காகக் கொண்டுவரப்படவிருந்த குலுக்கல் முறை, அடுத்த ஆண்டு தொடக்கம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Backpacker visa ballot shelved as government backs down

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
980976ead39096e870591f7ab13a85ec9260c8d6ddf331dff50ed0985f6de3b4
2026-11-18 00:08:51 கேள்
உங்கள் தோட்டத்து மண் உயிரோடு இருக்கிறதா? உள்ளாடையைக் கேளுங்கள்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பல்கலைக்கழகமும், அந்நாட்டின் தேசிய விவசாய ஆய்வு மையமான (Agroscope) அக்ரோஸ்கோப்பும் இணைந்து நடத்திய ஓர் ஆய்வு பற்றிய செய்தியை ScienceDaily அறிவியல் செய்தித் தளம் வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Is your garden soil alive? Ask your undies!

தொழில்நுட்ப விவரங்கள்
GUID
236030e079df3df592e46456b095bfa32f5a23b8c104aaa7edd88d47fcd3748f
2026-11-18 00:04:51 கேள்

SBS இலிருந்து மேலும்

இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.

பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.