பாட்காஸ்ட் விவரங்கள்
SBS Tamil - SBS தமிழ்
SBS
விளக்கம்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
விவரங்கள்
சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடுகள்
200 எபிசோடுகள் கிடைக்கும் (ஆர்எஸ்எஸ் மொத்தம் 2751; சமீபத்திய காட்டுகிறது 200) · 20 இன் 20 பக்கம்
| அத்தியாயம் மற்றும் உள்ளடக்கம் | தேதி | கால அளவு | கேள் |
|---|---|---|---|
|
ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் இன்று முதல் புதிய மாற்றங்கள்
அக்டோபர் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் Ramyam Australian Education and Visa Services நிறுவனரும் குடிவரவு முகவருமான Dr அண்ணாமலை மகிழ்நன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:10:55 | கேள் |
|
Do you know how to disagree respectfully? - SBS Examines: மரியாதையுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது எப்படி?
Half of us believe that most people can’t be trusted. At the same time, 47 per cent of Australians often feel very lonely. Could learning to disagree well help foster connection? - எம்மில் பாதிப் பேர், பெரும்பாலான மக்களை நம்ப முடியாது என்று நினைக்கிறோம். அதே நேரத்தில், இந்நாட்டில் வசிக்கும் 47 சதவீதமானவர்கள் மிகவும் தனிமையாக இருப்பதாக அடிக்கடி உணர்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை நன்கு கையாளக் கற்றுக்கொள்வது, உறவுகளை வளர்க்க உதவுமா? SBS Examinesற்காக Lera Shvets எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast - #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:08:05 | கேள் |
|
Western Sydney விமான நிலையத்திலிருந்து City செல்ல பேருந்து கட்டணம் எவ்வளவு?
சிட்னியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புதிய Western Sydney சர்வதேச விமான நிலையத்திலிருந்து Sydney CBD-க்கு இயக்கப்படவுள்ள நேரடி Shuttle பேருந்து சேவைக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:02:50 | கேள் |
|
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (27 செப்டம்பர் – 3 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (27 September – 3 October 2026) தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-02 | 00:06:13 | கேள் |
|
சிட்னி விமானநிலையத்திலிருந்து பயணிப்பது ஆபத்தானதா?
சிட்னி விமான நிலையத்தில் ஜூலை 27ஆம் தேதி இரண்டு பயணி விமானங்கள் ஒன்றுக்கொன்று வெறும் 120 மீட்டர் தூரத்தில் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டன. ஒரு விமானத்தில் 157 பேர். மற்றதில் 55 பேர். ஒரு பெரும் அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. பதிவுகள் 2003ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்து, ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான ஓடுபாதை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று, நாட்டின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணை அமைப்பு, நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிட்னி விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த ஆபத்தான நிகழ்வுகள் பற்றிய முதற்கட்ட அறிக்கைகள் இப்போது வெளியாகியுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:11:05 | கேள் |
|
முதன்முறையாகப் பறை இசைக்குக் கலைமாமணி வென்ற பனையூர் ராஜா!
கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்பவர்களுக்கு வருடாவருடம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைமாமணி விருதுகளை வழங்கி வருகிறது. 8 வருட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அதன்போது, முதன்முறையாக, ஒரு பறை இசைக் கலைஞருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விருது பெற்ற டாக்டர் பனையூர் ராஜாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:14:15 | கேள் |
|
ஆஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் ஈம்யு: ஆச்சரிய தகவல்கள்
கங்காருவைப் போலவே ஆஸ்திரேலியாவின் அடையாளமாக அறியப்படும் இன்னொரு உயிரினம் ஈம்யு. பறக்க முடியாது; ஆனால் மிக வேகமாக ஓடும். கடும் வெப்பத்தையும் உணவுப் பற்றாக்குறையையும் தாங்கும். அதிலும், முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது ஆண் ஈம்யு என்பது இன்னொரு ஆச்சரியம். இப்படிப் பல தனித்துவங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் ஈம்யு பறவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார் கீதா மதிவாணன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:08:46 | கேள் |
|
நடுவானில் நடந்த திகில்: Flydubai விமானத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம்
நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த Flydubai விமானம்… பயணிகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம். உயிருக்கு ஆபத்தான சூழலில், விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 174 பேரையும் காப்பாற்றிய அந்த சில நிமிடங்கள் எப்படி இருந்தன? இச் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:08:47 | கேள் |
|
Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் Oct 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:03:29 | கேள் |
|
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தின் வரைபு அரசினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைபு தொடர்பில் பலரும் எதிர்ப்பு; இலங்கையில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களினால் வருடாந்தம் சுமார் 2500 பேர் உயிரிழப்பு இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week தொழில்நுட்ப விவரங்கள்
|
2026-10-01 | 00:08:19 | கேள் |
SBS இலிருந்து மேலும்
இந்த படைப்பாளரிடமிருந்து வெளியிடப்பட்ட வேறு எந்த பாட்காஸ்ட்களும் தற்போது கிடைக்கவில்லை.
இதே போன்ற பாட்காஸ்ட்கள்
பாட்காஸ்ட் தரவு மற்றும் கலைப்படைப்புகள் அவற்றின் படைப்பாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் சொந்தமானது. இந்த தளம் அடைவு தரவு மற்றும் மூல இணைப்புகளை மட்டுமே வழங்குகிறது.